பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வெட்டி படுகொலை.!
பெரம்பலூரில் அமமுக நிர்வாகி வல்லத்தரசு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவ வந்தவர் வல்லத்தரசு. இவர் இன்று பெரம்பலூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.