அமமுக குள்ளநரிகள் கூட்டம்., அதிமுக சிங்கங்கள் இருக்கின்ற கூட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது என்று அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வந்தர்களை காண்பித்து தெரிவித்துள்ளார்.
இந்த எழுச்சியை பார்க்கும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அலை தமிழகத்தில் வீசுகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் எல்லா தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் என கூறியுள்ளார்.
விருப்ப மனு அளிக்கின்ற வேகத்தை பார்க்கும்போது, எங்கள் சக்தியை காட்டிலும், இந்த இமயமலை என்ற மாபெரும் சக்தியை காட்டிலும் உலகத்தில் வேறு எந்த சக்தியும் இல்லை என்கிற அளவிற்கு, வரலாறு படைக்க இருக்கும் அதிமுக. எனவே மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரவேண்டும் என்று ஒருமித்த கருத்துடன் மக்களும், நாங்களும் பயணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவது கிடையாது. ஒரு பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். முதல்வர் கூறியது போல், அமமுக தினகரன் மற்றும் சசிகலா அதிமுகவில் இணைவதற்கான எந்த சத்தியமும் இல்லை என்றும் அவர்களை சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்புயில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதான் உறுதியான நிலையில், இதில் எந்த மாற்றமும் கிடையாது. நேற்று தினகரன் கூறிருந்தார், அவர்கள் தலைமையில் கூட்டணி என்று, இது ஒரு நகைசுவைகையாக தான் இருக்கிறது என அமைச்சர் விமர்சித்துள்ளார். குள்ளநரிகள் கூட்டமாக இருப்பது அமமுக, சிங்கங்கள் கூட்டமாக இருக்கின்றது அதிமுக என கூறிய அவர், சிங்கங்கள் எங்கே இருக்கு, குள்ளநரிகள் எங்கே இருக்கு இது எப்படி என விமர்ச்சித்துள்ளார்.
தினகரனின் பேச்சு ஒரு நகைச்சுவையாகத் தான் மக்கள் எடுத்துக்கொள்வார்கள். கட்சியை பொறுத்தளவில் கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களது கூட்டணியில் பாஜக ஒரு அங்கம், எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகையால், கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடாமல் தான் பாஜக இருக்கிறது. அவர்கள் அப்படி கூறியிருந்தாலும், அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என கூறியுள்ளார்.