ஜூன் 7-ல் அமமுக செயற்குழு கூட்டம் – டிடிவி தினகரன் அறிவிப்பு

ttv dhinakaran

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது என டிடிவி தினகரன் அறிவிப்பு.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அமமுகவின் செயற்குழு கூட்டம் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் ஜூன் 7ம் தேதி புதன் கிழம காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்