அம்மா மினி கிளினிக் மூடல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Default Image

இந்த திட்டம் திமுக அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 2000 கிளினிக்குகளில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களில் செயல்பட்டு வந்தன.

சென்னை பெரியார் திடலில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும், அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும், அம்மா மினி கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய 1820 மருத்துவர்கள் தற்போது கொரோனா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்