‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டம் – தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி
‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று ‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் நோக்கம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும்.இதற்காக 20 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் நபர்களுக்கு 14 முகக்கவசங்கள், வெப்பமானி,பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி,கிருமி நாசினி,வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் ரூ.2500 செலுத்தி பயன்பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் காணொலி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் மருத்துவக் கண்காணிக்கப்படுவார்.இந்தியாவில் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் முறையாக திட்டம் தொடங்குவது தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.