‘அமித்ஷாவும் – தாகூரும்’ – அமித்ஷா அவர்களே..! நீங்கள் இந்தியில் எழுதுகிற வரலாறு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி – சு.வெங்கடேசன்
உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி.
வெங்கடேசன் எம்.பி அவர்கள் ஆங்கில நாளிதழில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தி குறிப்பை சுட்டி காட்டி விமர்சித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘எல்லா மாநிலங்களின் வரலாற்றையும் “இராஜ பாஷையில்” (இந்தியில்) மொழி பெயர்க்கலாம். இந்தியர் எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். தாகூர் சொன்னார், இந்தியக் கலாச்சாரம் என்பது முழுதாய் மலர்ந்த தாமரை போன்றது என்று. அதன் இதழ்கள் ஒவ்வொன்றும் உள்ளூர் மொழிகள் என்றால் ராஜாபாஷை (இந்தி) தாமரை ஆகும். – அமித்ஷா
அப்படி கடவுள் விரும்பியிருந்தால் இந்தியர்கள் அனைவரையும் ஒரே மொழி பேசுபவர்களாக படைத்திருப்பார். இந்திய ஒருமைப்பாடு என்பது எப்போதுமே வேற்றுமையில் ஒற்றுமையே. – தாகூர்
அமித் ஷா அவர்களே,
நீங்கள் இந்தியில் எழுதுகிற வரலாறு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.
வரலாற்றை தெற்கில் இருந்து துவக்குவோம் என்று நாங்கள் சொல்லுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
வரலாறு பொய்மை நிறைந்த உதடுகளால் பேசப்படுவது அல்ல… உண்மைகளால் பேசப்படுவது… அது பேசும் உண்மைகளில் முக்கியமானது அனைத்து மொழிகளுமே ஆட்சி மொழிகள் ஆக வேண்டும் என்பது.’ என பதிவிட்டுள்ளார்.
அமித் ஷா அவர்களே,
நீங்கள் இந்தியில் எழுதுகிற வரலாறு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.வரலாற்றை தெற்கில் இருந்து துவக்குவோம் என்று நாங்கள் சொல்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
வரலாறு பொய்மை நிறைந்த உதடுகளால் பேசப்படுவது அல்ல… உண்மைகளால் பேசப்படுவது… #Hindi #Tagore pic.twitter.com/GnsMyWhFCV
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 15, 2021