தேர்தல் பரப்புரைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். இவரை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தரவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் பரப்புரையை மேற்கொண்ட அமித்ஷா மீண்டும் பரப்புரைக்காக வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…