உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக தமிழகம் வரும் அமித் ஷா
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ஆம் தேதி(நாளை ), சென்னைக்கு வர உள்ளார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அமித் ஷா முதல்முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.