இலக்கிய துறைக்கான 54-வது ஞானபீட விருது அறிவிப்பு..!பிரபல ஆங்கில நாவலாசிரியர் தேர்வு..!!

Default Image

ஒவ்வோரு ஆண்டும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளில் சிறந்த எழுத்தாளருக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது.இந்த விருதினை பெறுவோர்க்கு  7 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்கம், செம்பு கலந்த  பட்டயமும் அதனுடன் பாராட்டுப் பத்திரம் மட்டுமல்லாமல் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த விருதானது  1961-ல் இந்தியாவில் நிறுவப்பட்டது.மேலும் இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்க்கு சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி அவர்களின் இலக்கிய படைப்பை கவுரவித்து வருகிறது.
Related image
இலக்கிய துறைக்கு என்றே வழங்கப்படும் இந்த விருது அந்த துறையில் சிறப்பாக செயலாற்றிய ஒருவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய மிக உயரிய விருதாகும்அவ்வாறு இந்தாண்டுக்கான ‘ஞானபீடம்’ விருது அமிதவ் கோஷ் என்கிற பிரபல ஆங்கில எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Related image

54 வது ஞானபீடம் விருதினை பெறப்போகும் பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ் (62) 1956-ம் ஆண்டில் மேற்குவங்கம் மாநில கொல்கத்தாவில் பிறந்தவர். ஆனால் இவர் தற்போது நியூயார்க்கில் மனைவி டெபோரா பேக்கர் உடன் வசித்து வருகிறார்.
Image result for amita ghosh
தனது படிப்பை டெல்லி முடித்த இவர் ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார்.மேலும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image result for ஞானபீட விருது
இதுவரை ஞானபீட விருதை தமிழில் பிரபல எழுத்தாளர்களான அமரர் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகிய இருவர்  1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஞானபீட விருதினை பெற்றனர்.மேலும் கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் மற்றும் இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் ஞானபீட விருதைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்