இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ
இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை.ஆனால் தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே இருக்கும் .தமிழை மையமாக வைத்து, தமிழுக்கு மரியாதை கிடைக்கும் வகையில் அரசு செயல்படும்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது . விரைவில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.