அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து ட்விட்டரில் #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிராக சமூக வலை தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
.இதனால் ட்விட்டரில் இந்திய அளவில் #StopHindiImposition ,#StopHindiImperialism,#தமிழ்வாழ்க ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.மேலும் உலக அளவில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…