டெல்லியில் அமித் ஷா விருந்து ! முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்கிறார்..
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனவே நாளை காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி எண்ணிக்கை நடைபெறும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.மேலும் இந்த அழைப்பு கூட்டணி கட்சிகளை வலுப்படுத்துவதற்கான நிகழ்வாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.