அதிமுக மற்றும் அமமுகவை கூட்டணி என்ற அடைப்படையிலாவது இணைத்து விடவேண்டும் என்று பாஜக தரப்பில் அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, சசிகலாவின் அறிக்கை மிகவும் நுட்பமாகவும், கவனமாகவும் உள்ளது. சசிகலா உடல்நலம், மனநலம் கருதி அமைதியாக இருக்கலாம் என்ற நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அல்லது பாஜகவின் அழுத்தம் கொடுத்து அவருக்கு நெருக்கடி கொடுத்து இந்த முன் இந்த முடிவை எடுக்க நேர்ந்திருக்கலாம்.
அதிமுக, அமமுக தொண்டர்களை இணைப்பதற்கு தான் ஒரு தான் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தன் அரசியலில் இருந்து விலகி அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைக்க ஒரு தொலைநோக்கு பார்வையுடன் இந்த முடிவை எடுத்திருக்கலாம். திமுகவை பொது எதிரியாகக் கருதி அதை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்பதே அவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இது அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார். மேலும், அதிமுக மற்றும் அமமுகவை கூட்டணி என்ற அடைப்படையிலாவது இணைத்து விடவேண்டும் என்று பாஜக தரப்பில் அமித்ஷா பல முயற்சி மேற்கொண்டதை ஊடகங்களில் வாயிலாக வந்த தகவல் மூலமாக அதை அறிய முடிகிறது என கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…