எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அமித் ஷா கூறவில்லை-அண்ணாமலை விளக்கம்..!
இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் அதிமுகவிலிருந்து 14 பேரும், காங்கிரஸிலிருந்து ஒருவரும் என மொத்தம் 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். கூட்டணி வரலாம் என்று அதிமுகவை குறிப்பிட்ட அமித் ஷா பேசவில்லை எல்லோரும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அமித்ஷா பேசினார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம் எனவும் அமித் ஷா பேச்சு பொருள்படும் என தெரிவித்தார். மற்றபடி, எந்தக் கட்சியையும் அமித் ஷா குறிப்பிட்டு சொல்லவில்லை. அமித் ஷா சொன்னபடி கூட்டணி கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது என கூறினார்.
“எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார்
எத்தனையோ கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கூட்டணிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம், 2024 தேர்தல் வித்தியாசமானது. இதற்கு முன்பு இது போல் தேர்தல் களம் கிடையாது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல்படி கடைசி நேரத்தில் கூட கூட்டணி அமையலாம். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து தெளிவான முடிவு கிடைக்கும்.
மோடி தான் மீண்டும் பிரதமராக வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே , மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் ” என கூறினார்.