ரஜினிகாந்த் குறித்து அமித்ஷா என்னிடம் கேட்டார்- ஆடிட்டர் குருமூர்த்தி..!
நேற்று காலை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில்,ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசியலில் சற்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ரஜினி கூட்டணி அமைத்து வருகின்ற தேர்தலில் போட்டியிடுவாரா..? அல்லது தனித்து நின்று போட்டியிடுவாரா..? இவரின் அறிவிப்பால் தற்போது உள்ள கட்சிகளில் குழப்பம் ஏற்படுமா..? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரபல தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்சித் தலைவர்களும் இல்லாததால், தற்போது கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளது. ரஜினி முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ரஜினியை நடிகராக யாரும் பார்க்கவில்லை.
அவரை ஒரு நல்ல மனிதராக பார்க்கிறார்கள். ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ரஜினிகாந்த் குறித்து அமித்ஷா என்னிடம் கேட்டார். ரஜினி முடிவு செய்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும் என்று சொன்னேன் என்று கூறினார்.