உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையும்! மு.க.ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டமும்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 11ஆம் தேதி, சென்னைக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க்கக அமித்ஷா சென்னை வர உள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்கத்தில் பெரும்பாலான காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளதாம். அடுத்தடுத்து நிகழப்போகும் அரசியல் நிகழ்வுகளில் என்ன நடக்க உள்ளது என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.