சென்னை : இன்று அதிகாலை சென்னை டி.பி சத்திரம் பகுதியில் ரவுடி ரோஹித் ராஜன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது பெண் எஸ்.ஐ-யால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராக அப்போது பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் ஓர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர், அப்பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்கை பெற்ற மனிதராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்தன.
இப்படியான சூழலில் தான், தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்ட உடனே அவரது செய்தியாளர் சந்திப்பும், முன்னெடுத்த நடவடிக்கைகளும் கவனம் பெற்றன.
“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு அறிவுரை கூறப்படும். ” என்று அவர் கூறியதாகட்டும் , தமிழகம் முழுவதும் குற்றப்பதிவேடு கொண்ட ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை தீவிரமாக கண்காணிக்க செய்ததாகட்டும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் சாலைகளில் கூட சட்ட ஒழுங்கு காவல்துறையினரை கண்காணிக்க செய்ததாகட்டும் அருண் ஐபிஎஸ் செயல்பாடுகள் புருவம் உயர்த்த செய்தன.
அதற்கேற்றாற் போல, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதான திருவேங்கடம், காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஜூலை 14ஆம் தேதி சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே தான் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை காவல்துறைக்கு அடையாளம் காட்ட சென்ற திருவேங்கடம் , அங்கிருந்த ஆயுதங்களால் காவல்துறையினரை தாக்கியதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் , தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, திருச்சி என்கவுண்டர் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த துரை எனும் துரைசாமியை திருச்சி காவல்துறையினர் தேடி வந்த நிலையில் , புதுக்கோட்டை காட்டுப்பகுதியில் துரை இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு காவல்துறையினர் செல்கையில், துரை காவல்துறையினரை தாக்கல் முற்பட்டதாகவும், அதனால் காவல்துறையினர் துரையை சுட்டதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்டரில் துரை உயிரிழந்தார்.
இதனை அடுத்து , இன்று சென்னையில் ஓர் என்கவுண்டர் நிகழ்வு நடந்துள்ளது. இதில் ரவுடி ரோஹித் ராஜனை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கு உட்பட மயிலாப்பூர், சேத்துப்பட்டு காவல் நிலையங்களில் ரோஹித் ராஜன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேனியில் பதுங்கி இருந்த ரோஹித் ராஜனை நேற்று காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை சென்னை அழைத்து வந்தனர். சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரோஹித் ராஜனை உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தன் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த ரவுடி ரோஹித் ராஜன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ரவுடி தாக்கிவிட்டு தப்பி ஓடுகையில், தைரியமாக துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ கலைச்செல்வியை சென்னை கமிஷனர் அருண் ஐபிஎஸ் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் கூறியது போல ரவுடிகளுக்கு புரியும்படி தற்போது காவல்துறையினரின் செயல்பாடுகள் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…