மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் சில வாத்து பண்ணைகள் இருக்கிறது. அதில் வளர்ந்து வந்துகொண்டு இருந்த வாத்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தொடர்ச்சியாக உயிரிழந்துகொண்டே வந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த வாத்துகள் பறவை காய்ச்சல் பரவி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, இந்த பறவை காய்ச்சல் பரவலை உடனடியாக தடுக்கவேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை மிகவும் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது என்பதனை கண்டுபிடித்து அந்த பண்ணைகளில் இருந்து கிட்டத்தட்ட 1 கி.மி. வரை எந்த இடங்களில் எல்லாம் வாத்துகள்,கோழிகள் வளர்க்கப்படுகிறதோ அதனை அழிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகள் கூட விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவி வரும் இந்த பறவை காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்தில், பொது சுகாதாரத் துறை ” தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை. இருந்தாலும் அதற்கான அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் ஆகி இருக்கிறது. குறிப்பாக, ஆனைகட்டி, வாளையாறு, முள்ளி, மேல்பாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.