முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

America Embassy

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

இதன்பின் பேசிய முதலவர், அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் அண்மையில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.

அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இந்தியாவின் முதல் 3 தொழில் மயமான மாநிலங்களுக்குள் தமிழ்நாடும் ஒன்று என தெரிவித்தார். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக ஆசியாவிலேயே முதல் 3 இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்