ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், சரக்கு வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் சில மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நோயாளிகளை ஏற்றி செல்லும் அம்புலன்ஸ்களும், இந்த சமயங்களில் கிடைப்பது கடினமாக தான் உள்ளது.
இந்நிலையில், மதுரை பாலமேட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 31 வயது பரணிமுத்து என்பவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆன காரணத்தினால், அவரை திறந்தவெளி வேனில் வைத்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அழைத்து சென்று, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…