ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே-அது எப்படி? – பீட்டர் அல்போன்ஸ்

Default Image

ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே-அது எப்படி? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். 

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழை,நடுத்தர மக்களின் அவசிய தேவையான சமையல் கேஸ், பெட்ரோல் டீசல், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களுக்கு விலைகளும் கூட்டப்பட்டு வரிவிகிதமும் வரைமுறை இல்லாமல் கூட்டப்படுகிறது.ஆனால் ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே-அது எப்படி?’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்