ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வருமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.!

ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயல் உருவாகும். அப்படி உருவாகும் ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் எங்கே கரையை கடக்கும் என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025