திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் வியக்கவைத்த பிரம்மாண்ட ட்ரோன் கண்காட்சி
திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை ஒப்படைத்தார்.
திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!
இதனை தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில், 1500 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் ஷோ-வை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர். அதன்போது திமுகவின் வரலாறு, ஆட்சியின் சாதனைகள், இளைஞரணி தோற்றம் குறித்து காட்டப்பட்டது. மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, மு.க ஸ்டாலின் ஆகியோர்களின் உருவங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் ட்ரோன் கண்காட்சியில் காட்டப்பட்டதை தொண்டர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.