மாணவியின் வியப்பூட்டும் செயல்.! ஒரு மாத்திரையில் எப்படி முடிந்தது.?
ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை சேர்ந்த பெண் கல்பனா.
விவசாயம் செய்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கல்பனாவை சேர்த்து 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டாவது பிள்ளையான கல்பனா 12 ஆம் வகுப்பு வரை வீர கேரளம்புதூரில் உள்ள பள்ளியில் படித்தார். மேலும் பட்ட படிப்பு சேரும் நிலை வரும் போது பெருளாதார தட்டுப்பாட்டால் சேர முடியவில்லை. பள்ளியில் படிக்கும்போதே கல்பனாவின் ஓவிய திறனை கண்டறிந்த ஆசிரியர்கள் அவளை பாராட்டினர்.
ஓவியக்கலை படிப்பில் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்ட கல்பனா குடும்பச்சூழல் காரணமாக தட்டச்சி படிப்பை முடித்து அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். மேலும் தனது கனவான ஓவியத்தை அழியவிடாமால் கிடைக்கும் சிறுசிறு பொருட்களில் வரைந்து வைத்துக்கொண்டுள்ளார். ஒரு சிறு மாத்திரையில் திருவள்ளுவரின் உருவத்தை சில நிமிடங்களில் வரையும் இவரது திறமையை ஊர்மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.