பள்ளத்தில் விழுந்த அதிமுக தொண்டர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கபடி விளையாட்டு வீரர்களின் கற்சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான இடத்தை ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரையின் நுழைவுவாயிலாக இருக்கக்கூடிய முக்கியமான சந்திப்புகளில் தொன்மை வாய்ந்த பழமையான சின்னங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கபடி வீரர்கள் அதிகம் உள்ள செல்லூர் பகுதியில் கபடி வீரர்களின் சிலை அமைப்பதில் பெருமை அடைகிறோம் என தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது அங்கு கூடிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரவுண்டானா மீது நின்று கொண்டிருந்தன. அப்போது திடீரென ரவுண்டானா மேற்பகுதியில் அமைக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து பூமிக்குள் சென்றது. இதனால் செல்லூர் ராஜூவை சுற்றிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் திடீரென பள்ளத்தில் விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை பத்திரமாக கைகளை பிடித்து மேலே மீட்டனர். இதனால் அந்நிகழ்ச்சியில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 minutes ago

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…

40 minutes ago

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…

1 hour ago

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

11 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

12 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

12 hours ago