பத்திரிகையாளர் மரணம்.! தமிழக அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த விளக்கம்.!
மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன.
இருந்து இந்த விபத்து சரியாக எந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என நேரம் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து நாங்கள் சோதனை செய்து வருகின்றோம். இந்த விபத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. இறப்பு தவிர்க்கப்பட வேண்டியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இறந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அறிந்ததும் உடனடியாக சென்று அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இருந்தும் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.
இரவு 2.30 மணி வரை பணிகள் நடைபெற்றது. மேற்பார்வையாளர் அங்கு 1.30 மணிவரை சென்று பார்த்துள்ளார். அதற்கான குறிப்பேடுகள் இருக்கின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.