வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் – மு.க ஸ்டாலின் கடிதம்.!

Default Image

அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று  தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தலில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என்பதால் அதிகரித்தால் உள்ளவர்கள் தடைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் 500 வீடுகளுக்கு சென்று அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவை நிராகரிப்போம் என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதிக்கொண்டால் வெற்றி நம் பக்கம்.

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதை லட்சியமாகக் கொண்டு தொண்டர்கள் உழைக்க வேண்டும். இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா – சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா – வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல.

தமிழ்நாடு மீள வேண்டுமா – வாழ வேண்டுமா என்பதற்கான களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு. எனினும் வெற்றி மட்டும் தி.மு.கழகத்திற்குத்தான் கிட்டும். அந்த வெற்றிக்கு அடிப்படையானவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள்.

எத்தனை கட்சிகள் களம் கண்டாலும், அது அவர்களின் ஜனநாயக உரிமை என மதிப்பளித்து, நம் கவனம் முழுவதையும் வெற்றியை நோக்கியே குவித்திட வேண்டும். நேரடியாகவும் – மறைந்திருந்தும் தி.மு.கழகத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், தாக்குதல் நடத்தும் எதிரிகளை வீழ்த்திட உறுதி பூண்டிட வேண்டும். அதற்கேற்ப, மக்களின் உறுதியான நம்பிக்கையை உளப் பூர்வமாகப் பெற்றிட ஓயாது உழைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்