ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பல காலங்களாக ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்றினை நேற்று தனது டுவிட்டர் வழியாக ரஜினி தெரிவித்தார். அதாவது ஜனவரியில் அவர் கட்சி துவங்க உள்ளதாகவும் அது குறித்த திகதியை டிசம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒருவரையும் மேற்பொறுப்பாளராக தமிழருவி மணியனையும் நேற்று நியமித்து அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினி கட்சி துவங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…