காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது – மு.க.ஸ்டாலின்

Default Image

“அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார்.  அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது .உயர்நிலை சிறப்புத் அந்தஸ்து கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதியின் மூலம் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடர்பு போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.

ஆனாலும் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆகவே  இது குறித்து உயர் கல்வி அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில்,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.சிறப்பு அந்தஸ்துக்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தயாராக இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது.

அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட – தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு – தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு – பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/MKStalin/posts/1773326646160531

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்