நான் தமிழக முதல்வரானாலும் உங்களில் ஒருவன் தான் – மு.க.ஸ்டாலின்
நான் முதல்வரானாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன்.
சென்னை, குளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரை வழங்கிய பெண், நாளைய முதலமைச்சர் முன் உரையாற்றுவது சற்று பதற்றமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்பெண்ணுக்கு பதிலளிலளிக்கும் விதமாக, ‘வரவேற்று பேசிய சகோதரி அவர்கள், ஒரே டென்ஷனா இருக்குறேன், நாளைய முதலமைச்சர் முன் உரையாற்றுவது சற்று பதற்றமாக உள்ளது என கூறினார்கள். அப்படியெல்லாம் டென்ஷன் ஆக கூடாது. நான் முதல்வரானாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.