இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில் பாதி பெண்கள் பாதி ஆண்கள் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் தேர்தலில் முதல்முறையாக திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமான், இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே சுமார் ரூ.6 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் வாசிங்மிஷின் இலவசம் என்று கூறியுள்ளார்கள். தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டை இருக்கிறது. ஒரு வாசிங்மிஷின் விலை ரூ.15,000 வரை வரும், ஆகையால், இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொண்டு வருவார்கள், அதுக்கு ஒரு திட்டத்தை வகுத்து சொல்லுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பி, ஒரு துறையை கூட விடாமல் அனைத்து துறையிலும் கடன் உள்ள நிலையில், எப்படி முடியும் என்று விமர்சித்துள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…