தனித்து போட்டியா? தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்.!

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காகமாவட்ட செயலாளர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025