சலூன் கடைகள் அனுமதி.! அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு.!
மே 28 -ம் தேதி சலூன் கடைகள் செயல்பட குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், மாநில அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலத்திலும் சலூன் கடைகளை திறந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெருநகர் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகள், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்க தலைவர் முனுசாமி சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரி தொடந்த வழக்கில், மே 28 -ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.