இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி
இன்று முதல் தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், பொது மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து, இன்று முதல் தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் ஆட்டோக்கள் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். தற்போது நோய் கட்டுப்பட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, ஆகியவற்றை இயங்க அனுமதி இல்லை. அப்பகுதியில் வாழும் ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசரை ஓட்டுநர்கள் வைத்திருக்கவேண்டும். ஓட்டுனர்களும், பயணிகளும் கண்டிப்பாக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.