பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்க ரூ.914 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.