10 வேளாண் விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!
10 வேளாண் விளைப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை ஏற்றுமதி அளவு அதிகரிக்கும்.
மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..!
எனவே நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த 3 ஆண்டுகளில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2024-2025-ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி , புவனகிரி மிதி பாகற்காய் , செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி இலை ,ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்” என அறிவித்தார்.
2024-25ஆம் ஆண்டு மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும். இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.