கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.
தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்தவகையில் காலை இடம் ஒதுக்காததற்க்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு என ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது என கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…