சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும், மருத்துவர் சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டுள்ளனர். இந்நிலையில், மாநில கொள்கை குழு உறுப்பினர்களுக்கான துறைகள் ஒதுக்கீடுசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, குழு துணைத்தலைவர்ஜெ.ஜெயரஞ்சன், உறுப்பினர் T.R.B. இராஜாவுக்கு வேளாண் கொள்கை, திட்டமிடல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இராம. சீனுவாசனுக்கு திட்ட ஒருங்கிணைப்பு, ம. விஜயபாஸ்கருக்கு வேலை வாய்ப்பு பொறுப்பு , மு. தீனபந்து ஊரக வளர்ச்சி, மாவட்ட திட்டமிடல் , மல்லிகா சீனிவாசன் , தொழில்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து, ஜோ. அமலோற்பவநாதன், கு. சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு சுகாதாரம், சமூகநலப் பொறுப்பு, சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் விவசாய நிலம் பயன்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழுவுடன் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…