வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு போராட்டம்- 204 வழக்குகள் பதிவு..!
உள்ஒதுக்கீடு போராட்டங்களில் ஈடுபட்ட பாமகவை சார்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக வன்னியர் சங்க போராட்டத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு நடவடிக்கை கோரி வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி போராட்டங்களில் ஈடுபட்ட பாமகவை சார்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு தற்காலிக அடிப்படையில் 10.5% இடஒதுக்கீடு வழங்கிய பின்னரே போராட்டங்கள் கைவிடப்பட்டது. சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனுமதியின்றி போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் வழக்கை தள்ளுபடி செய்ய பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.