உள்ளாட்சி தேர்தலில் ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கீடு – கமல்ஹாசன் மகிழ்ச்சி
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது பதிவில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மநீமக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் உள்ளிட்டோருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட மக்கள் நீதி மய்யம், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டிடுவதாகவும், 9 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 19, 2021