சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..!

Published by
murugan

அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி  சமூக நீதி கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு உலகை வெல்லும் இளைய தமிழகம்,  அறிவுசார் பொருளாதாரம், சமத்துவம் நோக்கில் மகளிர் நலன்,  பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற அம்சங்களில் பட்ஜெட் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும். நமது முழுமையான தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும் சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் படைப்புகளை பெற்று தமிழில் பல புதிய படைப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

இதில் 40 நாடுகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 7 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெற செய்ய தமிழக அரசு இந்த ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என அறிவித்தார்.

 

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

10 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago