கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர்-பிரேமலதா பெருமிதம்
கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளயிட்டது தேமுதிக.
அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக மக்களவை வேட்பாளர் மணிமாறன் ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.அதில்,கூட்டணி கட்சியினர் வானத்தைப்போல படத்தில் வரும் சகோதரர்கள் போல் வெற்றிக்கு பாடுபடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போதுள்ள அதிமுக கூட்டணி இனிவரும் காலங்களிலும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.பதவி வரும்போது பணிவு தேவை என்பதற்கு சான்றாக அமைச்சர்களை பார்க்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.