ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி -மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

Default Image

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

கமல்ஹாசன் 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார்.மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. எனவே மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டம்  இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில்  2021 -ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.தனித்துபோட்டியிடப்படும் அல்லது ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்