கருத்து ஒற்றுமை உள்ள கட்சிகளோடு தான் கூட்டணி – ஜெ.பி. நட்டா பேச்சு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அஇஅதிமுக இணைந்து போட்டியிடும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நான் இங்கு தேர்தல் கூட்டணி குறித்து பேச விரும்புகிறேன்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – அஇஅதிமுக இணைந்து போட்டியிடும்.மேலும் கருத்து ஒற்றுமை உள்ள கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.