பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அணி தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் …!திருமாவளவன்
பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அணி தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அணி தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும்.அதேபோல் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது.எனக்காக – எனது அரசியல் செல்வாக்கை எங்கேயும் எப்போதும் பயன்படுத்தியதில்லை. சுங்கச்சாவடியிலும் கட்டணம் கொடுத்தே பயணிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.