அதிமுக, தவெக – உடன் கூட்டணியா? சர்ச்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான்.!
திருச்சி : அதிமுக மற்றும் தவெக-வுடன் கூட்டணியா? நடப்பதைப்பற்றி பேசுங்கள் என நிருபரின் கேள்விக்கு நகைப்புடன் பதிலளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அரசியல் என வந்துவிட்டாலே அரசல் புரசலாக புரளி கிளம்புவது வழக்கம். அதற்கு தூபம் ஏற்றுவதுபோல் கட்சி தலைவர்களின் பேச்சும் சில நேரங்களில் சிதறித்தான் விடுகிறது. அந்த வகையில், சீமான் விஜயின் தவெக கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், கூட்டணிக்கான சம்மதத்தை தெரிவிக்கும் தோணியில் இருந்ததாக அரசியல் பிரமுகர்கள் கூறி வந்தனர். சீமானும், ஒரு பேட்டியில் “அண்ணனின் வழியில்தான் தம்பி வர வேண்டும்” எனவும் கூறி இருந்தார்.
அது மட்டுமின்றி, மற்றோரு பக்கம் சீமான் அதிகமுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாவும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் திருச்சி மாவட்டத்தில் வைத்து செய்தியாளர்களை சீமான் சந்தித்திருக்கிறார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் “பரவலாக தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது..அது என்னென்னா த.வெ.க, அதிமுக, நா.த.க மூன்று கட்சிகளும் வரும் 2026 தேர்தலில் கூட்டணி வைக்கப்போவதாக சொல்கிறார்கள் அது உண்மையா? எனக்கேள்வி கேட்டிருந்தார்.
அவரின் அந்த கேள்விக்கு தனது பாணியில் சிரித்துக்கொண்டே பதில் அளித்த சீமான், ” இதிலிருந்து என்ன தெரியுதுனா..அந்த வீட்டுல என்ன நடக்குது, இந்த வீட்டுல என்ன நடக்குதுனு புரளி பேசுவாங்களே அப்படி இருக்கு” எனக்கூறினார்.
மேலும், “கூட்டணிக்கா? அதுக்கு வாய்ப்பே இல்ல” என அடித்திக்கூறிய சீமான், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அந்த கட்சியுடன் இந்த கூட்டணி வைக்குமோ.. இந்த கட்சியுடன் அந்த கட்சி கூட்டணி வைக்குமோ என பலரும் பேசத்தான் செய்வார்கள், ஆனால் அவற்றில் ஏதேனும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதா ? எனவும் கேள்வி எழுப்பினார். 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்பதெல்லாம் தெரிய வரும்” எனவும் சீமான் விளக்கம் அளித்தார்.