உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை செய்தார்.
இதற்கிடையில், அனைத்து கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கு பின் பத்திரிகை நண்பர்களை முதல் முறையாக சந்திக்கிறேன். காமராஜர் பிறந்தநாளை தடுப்பூசி விழிப்புணர்வு நாளாக கொண்டாடுவோம்.
வரும் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்தநாளன்று மக்களிடம் சென்று தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேலும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும். அதிமுக கூட்டணி, வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், நிறைய விஷயங்களை கற்று கொண்டோம் என தெரிவித்தார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…