தேர்தல் வரும்போது ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்…!அன்புமணி
தேர்தல் வரும்போது ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. தேர்தல் வரும்போது ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முழுமையாக நடைபெற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.