திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் முடிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலம், சைதாப்பேட்டை, வடசென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தை வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டால் மிரட்டுகின்றனர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
ஊடகங்களுக்கே இந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும். மழை வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் நிற்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது. சென்னையில் வெள்ளநீர் வடிந்து விட்டதாக விளம்பரம் செய்கின்றனர்.
ஒருநாள் மழைக்கே சென்னை மிதக்கிறது இன்னும் 6 நாள் மழை இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி. திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் 1972-லேயே முடிந்துவிட்டது என்றும் திமுக தான் எங்கள் பகையாளி எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…