எதிர்க்கட்சிகளின் கூட்டணி முடிவில்லா தொடர்கதை – ஜிகே வாசன் பேட்டி
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்கட்சிகளால் சொல்ல முடியவில்லை என ஜிகே வாசன் விமர்சனம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒரு முடிவில்லா தொடராகத்தான் இருக்கப்போகிறது மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவை தலைமை தாங்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்கட்சிகளால் சொல்ல முடியவில்லை, கூட்டணி தலைவர் யார் என்பதை கூட சொல்ல முடியாத நிலை உள்ளது என விமர்சித்தார்.
இதற்கு முன் பேசிய அவர், பீகார் மாநில பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டமானது முரண்பாடுகளின் கூட்டமாகவே அமைந்துள்ளது. அந்தந்த, மாநிலத்தில் பாஜகவை வெல்ல முடியாத பயத்தில் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என கூறினார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தலைமையிலான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மீது திமுக அரசு வரி சுமையை ஏற்றிகொண்டுள்ளார்கள், மக்கள் சார்ந்த அரசாக செயல்படாமல் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் அரசாக உள்ளது எனவும் கூறியிருந்தார். இதனால், அதிகமான இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெரும், இன்னும் சில மாதங்களில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியை தேடி வர வைய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.